முழுக்க முழுக்க லண்டனில் நடக்கும் மாதவனின் அடுத்த படம்… இதுதான் காரணமா?

வெள்ளி, 7 ஏப்ரல் 2023 (08:51 IST)
நடிகர் தனுஷ் இயக்குனர் மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் யாரடி நீ மோகினி, குட்டி மற்றும் உத்தமபுத்திரன் ஆகிய 3 படங்களில நடித்து சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு கடந்த ஆண்டு ரிலீஸான திருச்சிற்றம்பலம் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. இதையடுத்து மித்ரன் அடுத்து நடிகர் மாதவன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்துக்காக மித்ரன் சொன்ன கதையில் திருப்தி அடையாத மாதவன், இப்போது ஜெயமோகனின் கதையைப் படமாக்கலாம் என்று மித்ரனுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து திரைக்கதை மற்றும் வசனத்தை எழுத்தாளர் ஜெயமோகன் எழுத உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படம் முழுக்க முழுக்க லண்டனில் படமாக்க உள்ளார்களாம். அதற்கு முக்கியக் காரணம் அங்கு ஷூட்டிங் நடத்தினால் குறிப்பிடத்தக்க அளவு மானியமாக தொகை தரப்படுகிறதாம். இதனால் விரைவில் லண்டனுக்கு படக்குழு செல்ல உள்ளதாக சொல்லப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்