கொரோனா அதிகரிப்பு எதிரொலி: அனைத்து மாநில சுகாதார அமைச்சர்களுடன் ஆலோசனை..!

வெள்ளி, 7 ஏப்ரல் 2023 (08:18 IST)
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் இன்று மத்திய சுகாதார அமைச்சர் ஆலோசனை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 5000க்கும் அதிகமானவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து மாநிலங்கள் எடுக்கவேண்டிய முக்கிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது
 
இந்த கூட்டத்தில் மாநிலங்கள் எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை கூறப்பட உள்ளது என்றும் தமிழகத்தில் இருந்து மருத்துவ மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளன. 
 
அனைத்து மாநில சுகாதார அமைச்சர் அவர்களுடன் மத்திய சுகாதார அமைச்சர்களுடன் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா இன்று காணொலி வழியாக ஆலோசனை செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தில் சில கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் ஆலோசனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்