உயிருடன் மீண்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! - தேனியில் சோகம்!

Webdunia
திங்கள், 5 ஜூலை 2021 (12:41 IST)
தேனியில் 6 மாத பிரசவாக பிறந்து இறந்ததாக கருதப்பட்ட குழந்தை பிழைத்த நிலையில் சிகிச்சை பலனின்றி தற்போது இறந்துள்ளது.

தேனி பெரியக்குளம் அருகே உள்ள தாமரைகுளம் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியமேரி. இவர் கர்ப்பமாக இருந்த நிலையில் 6 மாதத்திலேயே வலி கண்டதால் தேனி மருத்துவமனையில் சில நாட்கள் முன்னர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு குறை பிரசவத்திலேயே பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை இறந்து விட்டதாக மருத்துவமனை ஊழியர்கள் கூறியதால் அடக்கம் செய்ய எடுத்து செல்லப்பட்டது.

அப்போது குழந்தைக்கு இதய துடிப்பு இருப்பது தெரிய வந்ததால் உடனடியாக குழந்தை மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி தற்போது குழந்தை இறந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தேனி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்