வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை ஏற்றம்.. ஆனாலும் ஒரு சின்ன ஏமாற்றம்..!

Siva

திங்கள், 7 ஜூலை 2025 (09:36 IST)
இந்திய பங்குச்சந்தை இன்று வாரத்தின் முதல் நாளை சரிவுடன் தொடங்கினாலும், மிக குறைந்த அளவே சரிந்துள்ளதால் முதலீட்டாளர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர். 
 
கடந்த சில நாட்களாகவே பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. குறிப்பாக, ஈரான் - இஸ்ரேல் போர் முடிவுக்கு பின்னர் பங்குச்சந்தை பெரிய அளவில் சரியவில்லை என்பதையும் நாம் பார்த்து வருகிறோம்.
 
இந்த நிலையில், இன்று வாரத்தின் முதல் நாள் பங்குச்சந்தை வர்த்தகம் சற்றுமுன் தொடங்கிய நிலையில், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 41 புள்ளிகள் உயர்ந்து 83,478 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி வெறும் 19 புள்ளிகள் மட்டுமே சரிந்து 25,482 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரண்டுமே மிகவும் குறைந்த அளவு உயர்ந்துள்ளதால் மதியத்திற்கு மேல் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இன்றைய பங்குச்சந்தையில் அப்போலோ ஹாஸ்பிடல், ஆசியன் பெயிண்ட், பஜாஜ் ஆட்டோ, பாரதி, சிப்லா, டாக்டர் ரெட்டி, எச்டிஎப்சி வங்கி, ஹிந்துஸ்தான் லீவர், இன்டஸ்இன்ட் வங்கி, ஐடிசி, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன. 
 
ஆனால், அதே நேரத்தில் டிசிஎஸ், சன் பார்மா, ஸ்டேட் வங்கி, மாருதி, கோடக் மகேந்திரா வங்கி, இன்ஃபோசிஸ், ஐசிஐசிஐ வங்கி, எச்.சி.எல் டெக்னாலஜி, பஜாஜ் ஃபைனான்ஸ், ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் குறைந்து வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்