பெட்ரோல் விலை உயர்வு; சைக்கிளில் சென்று பிரேமலதா போராட்டம்!
திங்கள், 5 ஜூலை 2021 (12:27 IST)
பெட்ரோல், டீசல் விலை ரூ.100 ஐ கடந்துள்ள நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து தேமுதிக பொருளாளர் சைக்கிள் ஓட்டி போராட்டம் நடத்தியுள்ளார்.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து விலை உயர்வை சந்தித்து வரும் நிலையில் தற்போதைய பெட்ரோல் விலை ரூ.100 ஐ தாண்டியுள்ளது. இந்தியாவின் பல பகுதிகளில் டீசல் விலையுமே ரூ.100 ஐ தாண்டியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சைக்கிள் ஓட்டி சென்று தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளதுடன், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.