இந்நிலையில் மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு தமிழகம் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கூறி கர்நாடக முதல்வர் எடியூரப்பா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு பதில் கடிதம் எழுதியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக விவசாயத்திற்கு காவிரி நீர் இன்றியமையாதது என்றும், எனவே மேகதாது அணைக்கட்டும் திட்டத்தை கைவிடுமாறும் வலியுறுத்திய கடிதத்தை எடியூரப்பாவுக்கு அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் மேகதாது அணை விவகாரம் குறித்து பேசியுள்ள கர்நாடக காங்கிரஸ் ஒரு மாநிலம் தனது திட்டங்களுக்கு பிற மாநிலத்திடம் அனுமதி பெற தேவையில்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கர்நாடக முதல்வர், தமிழ்நாடு முதல்வரிடம் அனுமதி கோருவது ஏற்புடையதல்ல என்று கூறியுள்ளது.