தி.மு.க அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டும் காலம் வெகு தொலைவில் இல்லை- டிடிவி. தினகரன்

Webdunia
திங்கள், 1 மே 2023 (17:41 IST)
தமிழகத்தில் முதல்வர் முக,.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில், பெண்கள் பேருந்தில் இலவச பயணம் மேற்கொள்வதற்கு அமைச்சர் பொன்முடி சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், 1000 ரூபாய் உதவி பெறும் மாணவிகள், தாய்மார்களை இழிவுபடுத்தும் வகையில் பொதுநிகழ்ச்சியில் மூத்த அமைச்சர் திரு.துரைமுருகன் பேசியதற்கு பல்வேறு பிரிவினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து, அமமுக பொதுச்செயலாளார் தினகரன் தன் டுவிட்டர் பக்கத்தில்,
‘’இழிவுபடுத்தும் வகையில் தொடர்ந்து பேசிவருவது கண்டிக்கத்தக்கது.

1000 ரூபாய் உதவி பெறும் மாணவிகள், தாய்மார்களை இழிவுபடுத்தும் வகையில் பொதுநிகழ்ச்சியில் மூத்த அமைச்சர் திரு.துரைமுருகன் பேசியதற்கு பல்வேறு பிரிவினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மக்கள் வரிப்பணத்தில் செலவு செய்யும் அரசு அவர்களையே இழிவுபடுத்துவது எந்தவகையில் நியாயம்?

இலவசங்கள் தர வேண்டும் என்று பொதுமக்கள் யாரும் இவர்களிடம் கேட்கவில்லை. ஆட்சியைப் பிடிப்பதற்கு தி.மு.க தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதைத்தான் நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் கோருகின்றனர்.

பெண்களை இழிவுபடுத்தும் சமூகம் மட்டுமல்ல, பெண்களை அவமதிக்கும் ஆட்சியாளர்களும் நீடித்திருந்ததாக சரித்திரம் இல்லை. பெண்களை அவமதிக்கும் தி.மு.க அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டும் காலம் வெகு தொலைவில் இல்லை!’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்