நாங்கள் மட்டுமே உத்தமர்கள்’ என ஆட்சியாளர்கள் மார்தட்டிக்கொள்கிறார்கள்-டிடிவி. தினகரன் டிவீட்

வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (15:05 IST)
முறைகேட்டில் ஈடுபட்டு அபராதம் விதிக்கப்பட்ட அதே நிறுவனங்களிடமிருந்து நியாய விலைக் கடைகளுக்காக பருப்பு மற்றும் எண்ணெய் வாங்குவதற்கு முடிவு செய்துள்ள தி.மு.க அரசுக்கு அமமுக பொதுச்செயலாளர் தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டில் பொங்கல் பரிசுத் தொகுப்பு  வழங்கியதில் முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துக் குற்றம்சாட்டி வந்த நிலையில், இது தமிழகத்தில் பேசு பொருளானது.

இதையடுத்து, பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்கள் வழங்கிய நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ALSO READ: சர்ச்சைக்குள்ளாகும் பொங்கல் பரிசு தொகுப்பு! – முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!
 
இந்த நிலையில், இதே நிறுவனங்களிடம் இருந்து தற்போது ரேசன் கடைகளுக்காக பருப்பு, எண்ணெய் பொருட்கள் வாங்கவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், இதற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில், ‘’பொங்கல் பரிசுத் தொகுப்பு  வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டு அபராதம் விதிக்கப்பட்ட அதே நிறுவனங்களிடமிருந்து நியாய விலைக் கடைகளுக்காக பருப்பு மற்றும் எண்ணெய் வாங்குவதற்கு முடிவு செய்துள்ள தி.மு.க அரசுக்கு கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தரமற்ற பொங்கல் பரிசை மக்களுக்கு அளித்த நிறுவனங்கள் மீது முதலமைச்சர் திரு.ஸ்டாலின் எடுப்பதாக சொன்ன கடும் நடவடிக்கை இதுதானோ?!

இப்படி பச்சையாக முறைகேட்டில் ஈடுபடுபவர்களை ஊக்குவித்துக்கொண்டே ஊருக்கு ஊர், மேடைக்கு மேடை ‘நாங்கள் மட்டுமே உத்தமர்கள்’ என ஆட்சியாளர்கள் மார்தட்டிக்கொள்கிறார்கள்! என்று பதிவிட்டுள்ளார்.

Edited by Sinoj

 

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டு அபராதம் விதிக்கப்பட்ட அதே நிறுவனங்களிடமிருந்து நியாய விலைக் கடைகளுக்காக பருப்பு மற்றும் எண்ணெய் வாங்குவதற்கு முடிவு செய்துள்ள தி.மு.க அரசுக்கு கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். (1/3) @CMOTamilnadu @mkstalin

— TTV Dhinakaran (@TTVDhinakaran) September 30, 2022

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்