போக்குவரத்து துறையை தனியார் மயமாக்க அரசு திட்டமிடுவதாக தொழிற்சங்கங்கள் குற்றம் காட்டியுள்ள நிலையில், இதற்கு, அமமுக தலைவர் தினகரன் பொதுமக்கள்,போக்குவரத்துக் கழக தொழிலாளர்களை பாதிக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தன் டுவிட்டர் பக்கத்தில், பொதுமக்களுக்கு சேவை வழங்கும் அரசு பேருந்துகளை தனியார் மயமாக்க தி.மு.க. அரசு திட்டமிடுவதாக ஆளுங்கட்சி தொழிற்சங்கமே குற்றம்சாட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மக்களுக்கு குறைந்த செலவில் பொதுப்போக்குவரத்தை வழங்கும் கடமையில் இருந்து அரசு விலகி, தனியார் மயமாக்க முடிவு செய்வது ஏற்கதக்கதல்ல. பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் இருதரப்பையும் பாதிக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்.