தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு :வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Webdunia
செவ்வாய், 4 டிசம்பர் 2018 (13:46 IST)
வரும் டிசம்பர் 6 ஆம் தேதிமுதல் இந்தியபெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடலோரப் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழத்தில் கஜாபுயல் வந்து ஒரு புரட்டு புரட்டி போட்டு விட்டுப்  போன  பிறகு மீண்டும் நேற்று காற்றுடம் மழை பெய்தது. இந்நிலையில் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடித்து வருகின்ற காரணத்தால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு முதல் விடிகாலை வரை பலமாக மழைபெய்தது. சில இடங்களில் இடியுடன் கூடிய மழைபெய்தது.
 
இதனையடுத்து  மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
மேலும் வரும் 6 ஆம் தேதிமுதல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்