அச்சுறுத்தும் புதிய காற்றழுத்த தாழ்வுமண்டலம்! கனமழை பெய்ய வாய்ப்பு...
சனி, 17 நவம்பர் 2018 (13:18 IST)
தமிழகத்தில் உள்ள கடலோர பகுதிகளில் அடுத்த இரண்டு தினங்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாத காலகட்டங்களில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது அந்தமான கடலில் உருவாகும் போது மேலடுக்கு சுழற்சியுடன் இணைந்து காற்றழுத்த தாழ்வுநிலை சூறாவளி போன்றவை உருவாகின்றன.
கஜா புயல கரையை கடந்துவிட்ட நிலையில் அடுத்த இரு நாட்களுக்கு மழைபெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கடலோர பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மீனவர்கள் இன்று கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லலாம். ஆனால் அடுத்த இரண்டு நாட்களுக்கு கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது