விவசாயிகளின் கண்ணீரை துடைக்கவே போராட்டம் :திருச்சியில் ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

செவ்வாய், 4 டிசம்பர் 2018 (13:18 IST)
தமிழகத்தில் காவெரி நதிக்காக விவசாயிகள் மல்லுக்கட்டி  போராடி தண்ணீர் பெற முயற்சித்துக் கொண்டு இருக்கின்ற அதேநேரம் கர்நாடக அரசு மேகதாதுவில் தடுப்பு அணைகட்ட போவதாக முன்னேற்பாடுகளை எடுத்துவருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டத்துறை அமைச்சர் சண்முகம் மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசுடன் இனி பேச்சு வாத்தை கிடையாது என்று கடந்த வாரம் டெல்லி சென்ற போது கூறினார்.
 
இந்நிலையில் தமிழகத்தில் டெல்டா விவசாயிகள் எல்லோரும் தாம் பயிரிட்ட நிலபுஞ்சைகளில் சாகுபடி பெருக்கத்திற்கு அண்டை மாநிலமான  கர்நாடகத்திலிருந்து வரும் காவெரி மற்றும் மேகதாது போன்ற அணைகளை நம்பி இருக்கும் அதேவேளை தற்போது கர்நாடக அரசு மேகதாதுவின் குறுக்கே அணைகட்ட மும்மரம் காட்டி வருகின்றனார்.
 
இந்நிலையில் கர்நாடக  அரசின் இந்த திட்டத்திற்கு  எதிர்ப்பு தெரிவித்து இன்று ஸ்டாலின் தலைமையில் திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சி கூட்டம் திருச்சியில் நடைபெற்று வருகிறது.
 
வைகோ உள்ளிட்ட பல தலைவர்கள் இப்போராட்டதில் கலந்து கொண்டனர். பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும் இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இப்போராட்டதுக்கு ஆதரவு அளித்துவருகின்றனர்.
 
அப்போது திமுக தலைவர் மற்றும் எதிர்கட்சி தலைவருமாக ஸ்டாலின் பேசியதாவது:
இந்தப் போராட்டம் தேர்தலுக்காக அல்ல : அரசியலுக்காக அல்ல விவசாயிகளின் கண்ணீரை துடைப்பதற்காகவே நடத்தப்படுகிறது.
 
மேகதாதுவில் கர்நாடக அரசு அணை தட்டுவதை எதிர்ப்போம்  மேகதாதுவில் அணைகட்டினால்  தமிழகத்திற்கு  தண்ணீர் கிடைக்காது.
 
எனவே தமிழக மக்கள் மோடியின் இந்த செயலை மன்னிக்கவே மாட்டாரகள்.மேகதாதுவில் அணைகட்ட கர்நாடக அரசு நிதி ஒதுக்கிய பேதே மத்திய அரசு தடுத்திருக்க   வேண்டும்.
 
தமிழகத்தில் பாஜக கால் ஊன்ற முடியாது என்தால்தான் கர்நாடகாவில் அணைகட்ட உதவி இருக்கிறது.
 
பாஜக குட்டிகரணம் போட்டாலும் தமிழகத்தில் காலூன்ற முடியாது என்பதால்தான் மத்திய அரசு தமிழகத்திடம் ஓரவஞ்சனையுடன் நடந்து கொண்டுள்ளது.
 
இது சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்து 4 வருடங்கள் ஆகியும் ஜெயலலிதா, ஓபிஎஸ், ஈபிஎஸ்,ஆகியோர் இன்னும் தடை உத்தரவு பெற முடியவில்லை.
 
எனவேதான் இன்று திருச்சியில் அனைத்துக் கட்சியின் சார்பில் மேகதாது அணையின் குறுக்கே அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து இப்போராட்டம் நடைபெற்றுக் கொண்டுள்ளது.
 
மேகதாது அணையை கட்டும் முயற்சியை தடுக்க தமிழக உடனடியாக அரசு சிறப்பு கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
 
எனவே இந்த மேகதாது அணை விவகாரத்தில்  நம்மை முழுக்க முழுக்க கர்நாடகா வஞ்சிக்க காரணம் தமிழக அரசுதான்.இவ்வாறு ஸ்டாலின் தொண்டர்களின் எழுச்சி குரலுக்கு மத்தியில் பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்