நம்மில் ஒரு தலைவன் என்கின்ற பெயரில் அறக்கட்டளை துவக்கம் !

Webdunia
சனி, 14 மார்ச் 2020 (21:49 IST)
நம்மில் ஒரு தலைவன் என்கின்ற பெயரில் அறக்கட்டளை துவக்கம் !

இந்த சமுதாயத்தில் தொண்டர்கள் ஒரு புறமும் தலைவர்கள் ஒரு புறமும் உள்ளனர் என்றும், தலைவர்கள் நிறைய பேர் இருக்கும் நிலையில் தொண்டர்கள் குறைவாக தான் இருக்கின்றனர்.

மேலும் விவசாயமும் இயற்கை விவசாயம் செய்ய வேண்டுமென்கின்ற விதத்தில் மூன்று விசயத்தினை வைத்து நம்மில் ஒரு தலைவன் என்கின்ற பெயரில் அறக்கட்டளையை துவக்கிய கர்நாடகா காவல்துறையின் சிங்கம் ஐ.பி.எஸ் அண்ணாமலை நம்மில் ஒரு தலைவன் அறக்கட்டளையின் துவக்க விழாவில் கர்நாடகா காவல்துறையின் சிங்கம் என்கின்ற பெயரை பெற்ற அண்ணாமலை ஐ.பி.எஸ், இவர் ஐ.பி.எஸ் தேர்வினை தனது 25 வயதிலேயே எழுதி, ஜெயித்தவர் அண்ணாமலை. ஒன்பது வருடங்கள் கர்நாடக மாநிலத்தில் பணியாற்றிய இவர், கரூரில் நம்மில் ஒரு தலைவன் என்கின்ற தலைப்பில் அறக்கட்டளையை துவக்கியுள்ளார்.

வீ தி லீடர்ஸ் பவுண்டேஷன் என்கின்ற பெயரில் நம்மில் ஒரு தலைவன் என்கின்ற பெயரில் ஒரு அமைப்பினை உருவாக்கியுள்ள, காவல்துறையின் சிங்கம் அண்ணாமலை அவர், கரூர் அடுத்த ஆறுரோடு பிரிவில் உள்ள வள்ளுவர் கல்லூரியில் வீ தி லீடர்ஸ் என்கின்ற அறக்கட்டளையினை தொடக்கியுள்ளார். மேலும், அறக்கட்டளையின் லோகோ மற்றும் இணையதளத்தினை திறந்து வைத்த இந்த நிகழ்ச்சியில் சமூக நல ஆர்வர்லகள் மற்றும் இயற்கை விவசாயிகள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும், இதனை தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அண்ணாமலை ஐ.பி.எஸ் கூறும் போது., உங்களில் ஒரு தலைவன், என்கின்ற அமைப்பு என்னவென்றால்., ஒரு சமுதாயத்தில் தலைவர்கள் அதிகமாக இருக்கும் போது, தொண்டர்கள் குறைவாக இருப்பது எதனால் என்பதனை அறிந்து அதற்கு ஏற்றாற்போல், அதை இருக்கமான நம்பிக்கையாக வைத்து இந்த அமைப்பினை நாங்கள் உருவாக்கியுள்ளதாகவும், இன்று உருவாக்கிய இந்த அமைப்பில் 135 நபர்களை தன்னார்வலர்களை கொண்டு இந்த அமைப்பினை உருவாக்கியுள்ளதாகவும்,  மேலும், இதில் இணைய தன்னார்வலர்களை புதிதாக உருவாக்க, ஒரு இணையதளத்தினையும் உருவாக்கியுள்ளதாகவும், இந்த ஒரு மாதத்திற்கு தன்னார்வலர்களை நாங்கள் பதிவு செய்து, ஒரு மாதத்திற்கு பின்னர் அதாவது ஏப்ரல் 14 ம் தேதி முதல் எங்கள் செயல்பாடுகள் அதிகரிக்கும் என்றார்.

இதன் முக்கியமான நோக்கம் 19 வயது முதல் 24 வயது வரை உள்ள இளைஞர்களை இரு பாகமாகவும், அதில் படிக்கும் இளைஞர்களை ஒரு பாகமாகவும், மற்றொரு பாகமாக, படித்து முடித்து விட்டு வேலையில்லா இளைஞர்களையும் அந்த இரு வகையான இளைஞர்களையும் கம்யூனிகேஷன் மற்றும் நன்கு பேசக்கூடிய பயிற்சி மற்றும் ஒரு கிரிட்டிக்கல் வகையில் நன்கு சிந்தித்து செயல்படும் வகையில் பயிற்சி அளிக்கப்படும் என்றும், ஏனென்றால் அவர்களுக்கு ஒரு பயிற்சி நன்கு அளிக்கப்படும் என்றார். மற்றொன்று வாழ்க்கை முறையில் எப்படி நம்மை நாமே தயார் படுத்திக்கொள்வது, உண்ணும் உணவை இயற்கை முறையில் விவசாயிகளோடு இணைந்து செயல்படுவது. மாற்று விவசாயம் இயற்கை சார்ந்த விவசாயத்தினை ஏற்படுத்துவது. மற்றொன்று ஒரு புறம் தலைவர்களும், அதே புறம் தொண்டர்கள் ஒரு புறம் இருக்கின்றனர்.

ஆகவே நமது சமுதாயத்தில் தலைவர்கள் ஒரு புறமாகவும், தொண்டர்கள் ஒரு புறமாகவும் இருக்கும் நேரத்தில் அவர்களை ஒன்றிணைக்க வேண்டுமென்பது என்று மூன்று விஷயங்கள் எங்களது அமைப்பின் லட்சியம் என்றார். ஆகவே, மருத்துவர்கள், காவல்துறையினர் மற்றும் ஆசிரியர்கள் என்று எல்லா துறைகளிலும் உள்ள நிலையில் அவர்கள்., அந்த வேலை போக மிச்சமுள்ள நேரத்தில் அவர்களை ஒற்றுமையாக்கவும், நமது சமுதாயத்தில் ஒரு மாற்றத்தினை கொண்டு வருவது தான் இந்த வீ தி லீடர்ஸ் ன் முக்கிய நோக்கம் என்றார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்