கரூர் மாவட்டம் ரெட்டிபாளையத்தை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 68) கரூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார் அந்த புகாரின் அவரது சித்தப்பா மனைவி நாச்சம்மாள் மற்றும் அவரது மகன் நல்லுசாமி மகள் பாப்பாயி ஆகியோர் கடந்த சில ஆண்டுகளாக அருகிலுள்ள சர்ச்சில் பாதிரியார் மோசஸ் துரைக்கண்ணு என்பவரின் பராமரிப்பில் இருந்த வாழ்ந்து வந்தவர்கள். கடந்த 2018 ஆண்டு முதல் தொடர்ந்து அடுத்தடுத்து மகன் நல்லுசாமி மகள் பாப்பாயி மற்றும் நாச்சம்மாள் ஆகியோர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளனர்.
இவர்களை உயிழந்ததை உறவினர்களுக்கு தெரியப்படுத்தாமல் பாதிரியார் மோசஸ் துரைக்கண்ணு அவரது மகன் சாம்மங்கள்ராஜ் மற்றும் சர்ச்சில் பணிபுரியும் ராஜ்குமார் ஆகியோர் உடல்களை புதைத்துள்ளனர். மேலும் நாச்சம்மாள் குடியிருந்த வீடு மற்றும் அவரது வீட்டில் இருந்த பணம் நகை ஆகியவற்றை பாதிரியார் துரைக்கண்ணு அபகரித்துக் கொண்டார். இதுகுறித்து கேட்டபோது அவர் எங்களை மிரட்டி வருகிறார் என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.