இப்ப இல்லைன்னா, எப்பவுமே இல்லை: ஐஸ் வைத்து ரஜினி டிவிட்!!

சனி, 14 மார்ச் 2020 (12:20 IST)
நடிகர் ரஜினிகாந்த் தனது திட்டத்தை மக்களுக்கு கொண்டு போய் சேர்த்த அனைவருக்கும் நன்றி என டிவிட்டரில் பதிவை ஒன்று போட்டுள்ளார். 
 
ரஜினிகாந்த் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது இளைஞர்கள், மக்கள் மத்தியில் எழுச்சி உருவாக வேண்டும். அரசியலில் புரட்சி ஏற்பட்டு மாற்றம் நிகழும். அப்படி ஒரு மாற்றம் ஏற்படும்போது நான் அரசியலுக்கு வருவேன் என தெரிவித்தார். அதோடு தனது அரசியல் திட்டங்களையும் விளக்கினார். 
 
இந்நிலையில் இது குறித்த கடந்த இரு தினங்களாக பேச்சுக்கள் அதிக அளவில் இருந்த நிலையில், தற்போது தனது டிவிட்ட்ர பக்கத்தில் நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, 
 
அரசியல் மாற்றம் ஆட்சி மாற்றம் இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை என்கிற கருத்தை பாமர மக்களும் பேசுகின்ற, சிந்திக்கின்ற வகையில்  கொண்டு போய் சேர்த்த ஊடகங்களுக்கும்,பத்திரிகைகளுக்கும், சமூக வலைதளங்களுக்கும், மன்ற உறுப்பினர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்