துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் மீதான வழக்கு ரத்து!

Sinoj
செவ்வாய், 5 மார்ச் 2024 (14:33 IST)
கர்நாடக மாநிலத்தின் துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் மீதான சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நமது அண்டை மாநிலமான கர்நாடகத்தில் முதல்வர் சித்தாராமையா  தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.
 
இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தின் துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் மீதான சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
கர்நாடக துணைமுதல்வர் டி.கே.சிவக்குமார் மீது கடந்த 2018 -ஆம் ஆண்டு சட்டவிரோதமாகப் பணப்பரிவர்த்தனை மேகொண்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 
இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில்  நடந்து வந்த   நிலையில், கர்நாடக மாநிலத்தின் துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் மீதான சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
அதாவது, கூட்டுச்சதி என்ற புகாரை மட்டுமே வைத்து சட்டவிரோத பணப்பரிவர்த்தனை  வழக்குத் தொடர  முடியாது எண்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான அமலாக்கத்துறையின் மறுஆய்வு மனு நிலுவையில் உள்ளதால் , அதனை மேற்கொள்காட்டி இந்த வழக்கு ரத்துசெய்யப்பட்டது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்