எஸ்.பி.ஐ முன்வைத்துள்ள வாதம் மிகவும் கேவலமானது! அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Mahendran

செவ்வாய், 5 மார்ச் 2024 (10:16 IST)
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் எஸ்.பி.ஐ முன்வைத்துள்ள வாதம் மிகவும் கேவலமானது என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்,.
 
தேர்தல் பத்திரங்கள் மூலமாக அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியவர்கள் விவரங்களை வெளியிட, உச்சநீதிமன்றத்திடம் எஸ்.பி.ஐ  4 மாதகால அவகாசம் கோரியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 
 
எஸ்பிஐ வங்கி நினைத்தால் இந்த டேட்டாக்களை இரண்டு நிமிடங்களில் எடுத்து விடலாம் என்றும் ஆனால் நான்கு மாதங்கள் காலதாமதம் கேட்டிருப்பது என்பது நிர்வாக சீர்கேடு என்று அறிய முடிகிறது என்றும் அவர் தெரிவித்தார் 
 
இந்தியா ஒரு மிகப்பெரிய பொருளாதார நாடு என்று கூறப்படும் நிலையில் இந்தியாவிலேயே மிகப்பெரிய வங்கி எஸ்.பி.ஐ வங்கி தான் என்று கூறப்படும் நிலையில் ஒரு சின்ன டேட்டாவை எடுத்து கொடுக்க 4 மாத கால அவகாசம் கேட்டிருப்பது என்பது வெட்கக்கேடானது என்றும் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடுமையாக விமர்சனம் செய்தார்
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்