சாய்பாபா ஆலயத்தில் குருபூர்ணிமா வை முன்னிட்டு சத்யநாராயண பூஜை

வியாழன், 14 ஜூலை 2022 (22:45 IST)
கரூர் வெங்கமேடு விவிஜி நகர் சத்ய ஜோதி ஷீரடி சாய்பாபா ஆலயத்தில் குருபூர்ணிமா வை முன்னிட்டு சத்யநாராயண பூஜை மற்றும் சிறப்பு ஆரத்தி மற்றும் தேர்பவனி நிகழ்ச்சி மிகவும் வெகுவிமர்சையாக நடைபெற்றது
 
கரூர் வெங்கமேடு வி.வி.ஜி நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சத்ய ஜோதி ஐயப்பன் ஆலயத்தின் அருகே வீற்று எழுந்தருளி அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ சத்ய ஜோதி ஷீரடி சாய்பாபா ஆலயத்தில் குருபெளர்ணமி என்றழைக்கப்படும் குருபூர்ணிமா நிகழ்ச்சி காலை முதல் இரவு வரை நடைபெற்றது. குருபூர்ணிமா என்றழைக்கப்படும் குருபெளர்ணமியையொட்டி, மூலவர் சாய்பாபாவிற்கு விஷேச அலங்காரங்கள் செய்யப்பட்டு, தாமரை மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ராஜ அலங்காரத்தில் சத்ய ஜோதி ஷீரடி சாய்பாபா பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர், சத்யநாராயண பூஜையை தொடர்ந்து சிறப்பு ஆரத்திகளும், உற்சவர் சாய்பாபா பக்தர்கள் தோளில் தூக்கி வைத்து ஆலயத்தினை சுற்றி பவனி வந்தார். பின்னர் ஐயப்பன் ஆலயத்தினையும் சுற்றி வந்த சத்ய ஜோதி சாய்பாபாவிற்கு வழிநெடுகிலும் பெண்களின் கோலாட்டத்தோடு, ஆடல் பாடலுடன் பக்தி இசை நிகழ்ச்சியும் உற்சவர் ஆலயத்திற்குள் வந்து அருள்பாலித்தார். முன்னதாக நெரூர் அமர்நாத் சுவாமிகள் கோயிலுக்கு வந்து அருளாசி புரிந்தார். ஆன்மீக சொற்பொழிவும் நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியினை தொடர்ந்து அருள்மிகு ஸ்ரீ சத்ய ஜோதி ஐயப்பனுக்கும் சிறப்பு மஹா தீபாராதனை நிகழ்ச்சியும், ஸ்ரீ சத்ய ஜோதி ஷீரடி சாய்பாபாவிற்கும் தீபாராதனை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதற்கான முழு ஏற்பாடுகளை ஆலய நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்