அதிமுக அலுவலகத்தை கடப்பாறையால் இடித்தவர் ஓபிஎஸ் - கோகுல இந்திரா

புதன், 13 ஜூலை 2022 (16:18 IST)
அதிமுக முன்னாள் துணை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அதிமுக அலுவலகத்தை கடப்பாறையால் இடித்து அராஜகம் செய்தவர் என குற்றம்சாட்டியுள்ளார்.


அதிமுக இடைக்காகப்பொதுச்செயலாளராக முன்னாள் முதல்வர் எடப்பாடிபழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில்,அவரை நேரில் சந்தித்து கட்சியினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இன்று அவரை சந்தித்த வாழ்த்த் தெரிவித்த முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: பொதுக்குழுவுக்கான தீர்ப்பிற்காக அனைவரும் காத்துக் கொண்டிருக்கும் சூழ் நிலையில், ஓ. பன்னீர் செல்வம் தலைமை அலுவகம சென்றார். அவரது பாதுகாப்பிற்கு வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர் சென்றுள்ளனர். அவரது ஆதரவாளர்கள் உருட்டுக் கட்டை, கடப்பாற்றை ஆயுதங்களுடன் வந்தனர்.

அதிமுகவினருக்கு கொயிலாக இருக்கூடிய கட்சி அலுவலகத்தை கடப்பாறை ககொண்டு உடைத்து அராஜயம் செய்தவர் ஓபிஎஸ். அவர் கட்சியை அழிக்க எல்லா வழிகளிலும் முயற்சித்து வருகிறார் எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்