கோவில்களில் சிறப்பு யாகம் – அறநிலையத்துறை ஏற்பாடு!

Webdunia
செவ்வாய், 31 மார்ச் 2020 (14:31 IST)
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக முழுவதும் மூடப்பட்டுள்ள கோவில்களில் சிறப்பு யாகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் மாநிலத்தில் உள்ள அனைத்து கோவில்களும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் மூடப்பட்டுள்ள கோவில்களில் ஏப்ரல் 1 மற்றும் 4 ஆகிய தேதிகளில் சிறப்பு யாக பூஜை நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த யாகத்திற்கான காரணங்கள் என்னவென்று தெரியவராத நிலையில், இந்த யாகத்தில் மக்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. கோவில் அர்ச்சகர்கள் மட்டுமே இந்த யாக பூஜையை நடத்துவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்