கொரோனா வார்ட்டாகும் கலைஞர் அரங்கம்: அரசுக்கு ஆஃபர் கொடுத்த ஸ்டாலின்!!

செவ்வாய், 31 மார்ச் 2020 (14:16 IST)
திமுக தலைவர் ஸ்டாலின் கலைஞர் அரங்கத்தை கொரோனா வார்ட்டாக மாற்றிகொள்ளலாம் என விருப்பத்தை முன்வைத்துள்ளார். 
 
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் அவர்களை அனுமதிக்க போதிய இடவசதி ஏற்படுத்துவதற்கு அரசு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
 
ரயில் பெட்டிகளும் தற்போது கொரோனா வார்ட்டாக மாற்றப்பட்டுள்ளது. இந்ந்லையில் திமுக தலைவர் ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், கொரோனாவால் பாதிக்கப்படுவோர் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதற்கும், அது சார்ந்த அரசின் மற்ற அறப் பணிகளுக்கும், வாழ்ந்த காலத்தில் மக்கள் நலம் காக்க வாழ்ந்த கலைஞர் பெயரால் அமைந்த அரங்கத்தை அரசு பயன்படுத்த உள்ளார்ந்த விருப்பத்தை தெரிவிக்கிறேன் என பதிவிட்டுள்ளார். 
இதற்கு முன்னர் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யத்தில் இருக்கும் மருத்துவர்களை கொண்டு, என் வீடாக இருந்த கட்டிடத்தை, தற்காலிகமாக எளிய மக்களுக்கான மருத்துவ மய்யமாக்கி, மக்களுக்கு உதவ நினைக்கிறேன். அரசின் அனுமதி கிடைத்தால், அதை செய்ய தயாராக காத்திருக்கிறேன் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
கமல்ஹாசனின் உதவி கரங்களை ஏற்காத அரசு இப்போது ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்குமா என்பது சந்தேகமே... 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்