ஏற்கனவே தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியும் அவரது மகன் ராம்சரணும் நிதி உதவி வழங்கிய நிலையில் , சிரஞ்சீவியின் தம்பியும் ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் பவன் கல்யான் ரூ.2 கோடி உதவி அளித்துள்ளார். அதில், ஆந்திரா தெலுங்கான மாநிலங்களுக்கு தலா ரூ. 50 லட்சம் அளிப்பதாகவும்,மேலும் ரூ. 1 கோடி நிதியை பிரதமர் மோடியின் நிவாரண நிதிக்கு அளிப்பதாக தெரிவித்துள்ளார். கிரிக்கெட் வீரர் தோனி ரூ. 1 லட்சம் ரூபாயும், நடிகர் பிரபாஸ் ரூ. 4 கோடியும் , நடிகர் அல்லு அர்ஜூன் ரூ. 1.25 கோடி கொடுத்துள்ளனர்.