கவர்னர் வாரிசு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவதில்லை: கனிமொழிக்கு தமிழிசை பதிலடி!

Webdunia
செவ்வாய், 29 நவம்பர் 2022 (15:32 IST)
கவர்னர் தகுதி அடிப்படையில் தான் தேர்வு செய்யப்படுகிறார் என்றும் வாரிசு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவதில்லை என்று கனிமொழியின் கவர்னர் குறித்த பேச்சுக்கு புதுவை மற்றும் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.
 
கவர்னர் பதவியே ஒரு காலாவதியான பதவி என்றும் ஒரு மாநிலத்திற்கு கவர்னர் இல்லாமல் இருந்தால் சட்டங்கள் உடனடியாக இயக்கப்படும் என்றும் திமுக எம்பி கனிமொழி கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்த  நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் கனிமொழியின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார். தகுதியை வைத்து தான் ஆளுநர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்றும் வாரிசு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவதில்லை என்றும் கவர்னர்களை கனிமொழி விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்