தவெக 2ஆம் ஆண்டு தொடக்க விழா.. பிரசாந்த் கிஷோர் பங்கேற்பு..!

Mahendran
புதன், 26 பிப்ரவரி 2025 (10:35 IST)
தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா இன்று நடைபெற்று வரும் நிலையில், அதில் பிரசாந்த் கிஷோர் கலந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

தமிழக வெற்றி கழகம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட நிலையில், ஒரு ஆண்டு முடிவடைந்து, இரண்டாம் ஆண்டு தொடக்க விழா இன்று மாமல்லபுரம், பூஞ்சேரி என்ற பகுதியில் நடைபெற்று வருகிறது.

இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த விழாவில், 10:10 மணிக்கு விஜய் மேடைக்கு வந்தார். அவருடன் அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரும் வருகை தந்தார்.

தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த 3,000 கட்சி நிர்வாகிகள் இதில் பங்கேற்று உள்ளதாகவும், விழாவில் பங்கேற்ற நிர்வாகிகளுக்கு அறுசுவை விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

மேலும், மேடைக்கு வந்த விஜய், "புதிய கல்விக் கொள்கை - மும்மொழி திட்டத்தின் எதிராக போராட உறுதி ஏற்போம்" என வைக்கப்பட்ட பேனரில் கையெழுத்திட்டு, "கெட் அவுட்" என்ற இயக்கத்தை தொடங்கி வைத்தார். அவரை தொடர்ந்து கட்சியின் நிர்வாகிகளும் இந்த பேனரில் கையெழுத்திட்டு வருகின்றனர்.

Edited by Mahendran 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்