மீனாட்சி அம்மன் கோவிலில் மகாசிவராத்திரி! அபிஷேகத்திற்கு பக்தர்கள் பொருட்கள் தரலாம்!

Prasanth Karthick
புதன், 26 பிப்ரவரி 2025 (10:08 IST)

இன்று மகாசிவராத்திரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் விடிய விடிய சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ள நிலையில் பக்தர்கள் அபிஷேக பொருட்களை அளிக்க கால அவகாசம் தரப்பட்டுள்ளது.

 

இன்று நாடு முழுவதும் மகாசிவராத்திரி கொண்டாட்டங்கள் காரணமாக கோவில்கள் திருவிழாக் கோலமாக காட்சியளிக்கின்றன. புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று சிவராத்திரியில் இரவு முழுவதும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.

 

இன்று இரவு 10 மணி முதல் நாளை அதிகாலை வரை 4 கால பூஜைகளும் நடத்தப்படுகிறது. மீனாட்சி அம்மன் சன்னதியில் இரவு 10 -.10.40 மணி வரை முதல் கால பூஜை, 11 - 11.40 இரண்டாம் கால பூஜை, 12-12.40 மூன்றாம் கால பூஜை, நள்ளிரவு 1 - 1.40 நான்காம் கால பூஜை நடைபெறுகிறது

 

சுவாமி சன்னதியில் 11-11.45 முதல் கால பூஜை, 12 - 12.45 இரண்டாம் கால பூஜை, 1 - 1.45 மூன்றாம் கால பூஜை, 2 - 2.45 நான்காம் கால பூஜை நடைபெறும். அதிகாலை 3 மணிக்க அர்த்தஜாம பூஜை, 4 மணிக்கு பள்ளியறை பூஜை, 5 மணிக்கு திருவனந்தல் பூஜை நடைபெறும்.

 

4 கால பூஜைக்கு அபிஷேகம் செய்ய பால், தயிர், இளநீர், பன்னீர், பழவகைகள், தேன், நெய் உள்ளிட்ட அபிஷேக பொருட்களை பக்தர்கள் இன்று மாலைக்கு மீனாட்சி அம்மன் கோவில் அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்