குறிப்பாக, இந்த விழாவில் வைக்கப்பட்டுள்ள ஒரு பேனர் அனைவரையும் கவர்ந்துள்ளது. அதில், புதிய கல்வி கொள்கை, மும்மொழி திணிப்பு மற்றும் இன்னும் சில அவலங்களை கெட் அவுட் செய்து உறுதி ஏற்போம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், மும்மொழி கொள்கைகளை எதிர்த்து, பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தியும் "விஜய் கையெழுத்து இயக்கம்" தொடங்க உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதே பேனரில், "திரை மறைவு கூட்டு களவாணிகள் இருவரும் தமிழக மக்களின் பிரச்சினைகளை இருட்டடிப்பு செய்கிறார்கள்" என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, "விமர்சனத்திற்கு அஞ்சி கொடுங்கோலுடன் மக்களின் குரல்களை நசுக்கும் அரசியல் கோழைத்தனம்", "பெண்கள் பாதுகாப்புக்கும் நலனுக்கும் எதிராக நடந்து வரும் பெருந்துயரை கண்டும் காணாத பொறுப்பற்ற தன்மை", என்ற கருத்துக்களும் பேனரில் இடம் பெற்றுள்ளன.