இன்று (18.05.2023) கோடைகாலப் பயிற்சி முகாம் கரூர் நூலகத்தில் நடைபெற்றது.
இம்முகாமில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் திருமதி ராஜலட்சுமி அவர்கள் வரவேற்றார். யோகா மற்றும் மனவளக்கலை பயிற்சியாளர் திருமதி வ. புவனேஸ்வரி அவர்கள் இல்லம் தேடிக் கல்வி மாணவர்கள், தன்னார்வலர்கள்,வாசகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு டைனமிக் தியான பயிற்சி அளித்தார். பயிற்சியில் அவர் பேசியதாவது....
மாணவர்கள் தேர்வு அறையில் எவ்வாறு மனதை சம நிலையில் வைத்துக் கொள்வது, பதட்டம் இன்றி தேர்வு எழுதுவது எப்படி மற்றும் படித்தவற்றை மனதில் பதிய வைக்கும் வழிமுறைகள் குறித்து விளக்கம் அளித்தார்.
நூலகர் ம. மோகனசுந்தரம் நன்றி கூறினார். கோடை முகாமில் அடிப்படை கணினி பயிற்சியும் தமிழ் வாசிப்பு பயிற்சியும் மற்றும் தமிழ் நாப்பழக் பயிற்சியும் வழங்கப்பட உள்ளது.