ஒரு வருடத்திற்கு பின்பு வெளிவந்த வேளாளர்கள் ஆய்வு நூல்

புதன், 26 அக்டோபர் 2022 (23:00 IST)
நீண்ட மாதங்களுக்கு பின்பு வெளிவந்த நூல் ? ஒரு வருடத்திற்கு பின்பு வெளிவந்த வேளாளர்கள் ஆய்வு நூல் தொகுதி 1 – பொன்னியின் செல்வன் பாகம் 1 ஐ போல் காத்திருந்து வெளிவந்த வரலாற்று நூல் தொகுப்பு – திருக்கையிலாய ஸ்ரீகந்த பரம்பரை வாமதேவ ஸ்ரீ ல ஸ்ரீ மகாலிங்க பண்டார சன்னதி கலந்து கொண்டு அருளாசி வழங்கி கெளரவிப்பு.
 
 
கரூர் காமராஜர் நகர் பகுதியில் உள்ள சின்ன கொங்கு திருமண மண்டபத்தில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனத்தலைவர் த.கார்வேந்தன் தலைமையில், வேளாளர்கள் ஆய்வு நூல் தொகுதி 1 நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

மூன்று மந்தை சோழிய வேளாளர் சங்க செயலாளர் நாட்டாமை மணிவண்ணன் அனைவரையும் வரவேற்றார். தஞ்சை மாவட்டம், சூரியனார் கோயில், ஸ்ரீ சிவாக்கிர யோகிகள் மடம், இருபத்தி எட்டாம் சன்னிதானம், திருக்கயிலாய ஸ்ரீ கந்த பரம்பரை வாமதேவ ஸ்ரீ ல ஸ்ரீ மாகலிங்க பண்டார சன்னதி சுவாமிகள் கலந்து கொண்டு நூலினை வெளியிட்டு அருளாசி வழங்கினார். முதல் நூலினை சூரிய குல வங்கிஷன் ஆறைநாடு பட்டம் இம்முடி பட்டம், வணங்காமுடி வீர விக்கிரம் கரிகால சோழியாண்டனும், வேளாளர்கள் சமூக வரலாற்று ஆய்வு மையம் தலைவருமான சோழன் சிவப்பிரகாஷம் பெற்றுக் கொண்டார்.

மேலும், இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் உள்ள முக்கிய வேளாளர்கள் சமூக அமைப்பினை சார்ந்த நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அருளாசி வழங்கிய மகாலிங்க பண்டார சன்னதி சுவாமிகள் பேசிய போது, அசைவம் சாப்பிடும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம், அனைவரது நெற்றியில் திருநீறு இருக்க வேண்டும், எல்லோரும் உயர்ந்த நிலையை அடைய வேண்டுமானால், நகைகளுக்கு பதில் நிலங்களை வாங்கி நம் பாரம்பரிய விவசாயமான வெள்ளாண்மை எனப்படும் விவசாயத்தில் நாம் ஈடுபட வேண்டுமென்றார். அதற்கு நிலம் முக்கியம், ஒரு காலத்தில் நிலம் இருந்தால் தான் ஓட்டுரிமை என்ற நிலையும் வரலாம், ஆகவே, தமிழகத்தில் 70 சதவிகித மக்கள் நமது வேளாளர்கள் தான் உள்ளனர்.

ஆகவே, நாம் ஒன்றிணைந்தால் நல்ல ஒரு மாற்றத்தினை ஏற்படுத்த முடியும், நம்மில் பலர் சட்டசபை செல்ல வேண்டும், நம் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனத்தலைவர் த.கார்வேந்தன் உள்ளிட்ட பலரும் தமிழக சட்டசபை சென்றால் மட்டுமே, தமிழக கோயில்கள் காக்கப்படும் என்றார். மேலும், வைட்டமின் எம் என்பதனை மறந்து வரக்கூடிய தேர்தல்களில் உணர்வோடு வாக்களித்தாலே போதும் தமிழகம் ஒரு மிகப்பெரிய நல்ல முன்னேற்றத்திற்கு செல்லும் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்