பள்ளிப் பருவத்தில் மாணவர்கள் காதல் வலையில் சிக்க கூடாது! – எஸ்.பி பேச்சு.

Webdunia
வெள்ளி, 10 நவம்பர் 2023 (16:42 IST)
கீழையூர் ஒன்றியம் திருப்பூண்டி வடக்கு அரசு உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான கல்வி தன்முனைப்பு திட்டத்தை வியாழக்கிழமை துவங்கி வைத்த  மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஹர்ஷ் சிங், பள்ளி பருவத்தில் மாணவர்கள் காதல் வலையில் சிக்க கூடாது என  அறிவுறுத்தினார்.


 
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி தலைமை வகித்தார்.

பள்ளி தலைமை ஆசிரியர்  துரைக்கண்ணன் வரவேற்புரை வழங்கினார். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிஷ் சிங் கலந்துகொண்டு கல்வி தன்முனைப்புதிட்டத்தினை தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் பேசிய எஸ் பி பள்ளி பருவத்தில் மாணவர்கள் காதல் வலையில் சிக்க கூடாது படிப்பின் மீது கவனம் கொண்டு நன்கு படித்து தேர்ச்சி பெற்று வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும்.

குறிப்பாக மாணவர்கள் போதை பழக்கத்திற்கு இளம் வயதிலேயே ஆளாக கூடாது என அறிவுரைகள் வழங்கினார்.

இதில் கீழையூர் ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் ஞானசேகரன், ஊராட்சி மன்ற தலைவர் ராதிகா சத்யராஜ், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முகம்மது ரபீக், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரக்க்ஷிதா மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ,பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், ஆசிரியர்கள் ,ஆசிரியைகள் ,மாணவர்கள் கலந்து கொண்டனர்.
 


 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்