மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித்குமார் (28), தங்க நகை திருட்டு வழக்கில் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
"சம்பவம் நடந்த அன்று அஜித்குமாரைத் திருப்புவனம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில், அவர் இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அப்படி என்றால், அங்கிருந்தே விசாரணை தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், அவரது உடல் மதுரைக்குக் கொண்டு வரப்பட்டது ஏன்? என கேள்வி எழுப்பினர்.
உடற்கூராய்வு தொடங்குவதற்கு முன்பாக அஜித்தின் உடலை முழுமையாக பார்க்க தாயையும் சகோதரரையும் அனுமதிக்காதது ஏன்?" என சரமாரியாகக் கேள்விகளை எழுப்பிய மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், அஜித்குமார் காவலர்களால் அடித்து கொல்லப்பட்டதை மறைக்கவே இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்ததாகவும் குற்றம்சாட்டினார்.