நேற்று முன்தினம் அந்த மாணவரை சீனியர் மாணவர்கள் சிலர் தங்கள் விடுதி அறைக்கு அழைத்துச் சென்று பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவர் பணமில்லை என்று கூறவே, சீனியர் மாணவர்கள் அவரை தாக்கி, மொட்டையடித்து, அடித்து துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, மாணவனின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து 7 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ராகிங்கில் ஈடுபட்டு கைதான 7 மாணவர்களை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.