ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Mahendran
சனி, 16 நவம்பர் 2024 (15:43 IST)
ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தடையை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் நிறுவனம் தாக்கல் செய்த மறு ஆய்வு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடந்த நிலையில் இன்று இந்த தீர்ப்பு வெளியாகி உள்ளது.
 
அந்த தீர்ப்பில் மறு ஆய்வு மனு நிராகரிக்கப்படுவதாக கூறிய நீதிபதிகள் ஏற்கனவே அளிக்கப்பட்ட தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை என்றும் மறு ஆய்வுக்கான காரணம் எதுவும் சொல்லப்படவில்லை என்றும் தெரிவித்தனர். எனவே மறு ஆய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் கூறினர்.
 
தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் தாமிர ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு தடை விதித்தது. இந்த தடையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்த நிலையில் உச்ச நீதிமன்றமும் கடந்த 2020 ஆம் ஆண்டு உறுதி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
உச்சநீதிமன்றம் இந்த ஆலைக்கு தடை விதித்த போது தாமிர உற்பத்திக்கு இந்த நிறுவனத்தின் பங்கு முக்கியம் என்றாலும் அந்த பகுதியில் வசிப்பவர்களின் ஆரோக்கியம் அதைவிட முக்கியமானது என்று குறிப்பிட்டிருந்தது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்