கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களாக எந்த விதமான போக்குவரத்து இல்லாமல் இருந்த நிலையில் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் தான் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்கள் மட்டுமே இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நாடு முழுவதும் இன்னும் ரயில் போக்குவரத்து தொடங்கவில்லை என்றாலும் சிறப்பு ரயில் போக்குவரத்து மற்றும் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் தமிழகத்தில் ஏற்கனவே ஒரு சில சிறப்பு ரயில்கள் இயங்கிவரும் நிலையில் தற்போது மேலும் ஏழு சிறப்பு ரயில்கள் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் சென்னையிலிருந்து மதுரை, நெல்லை, செங்கோட்டை, கொல்லம் மற்றும் ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது
அதேபோல் எர்ணாகுளத்தில் இருந்து காரைக்காலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும் இந்த ரயில் தமிழகம் வழியாகத்தான் செல்லும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஏழு சிறப்பு ரயில்கள் குறித்த இந்த அறிவிப்பு தமிழக மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது