அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும்: மூன்றாவது நீதிபதி தீர்ப்பு

Webdunia
வெள்ளி, 14 ஜூலை 2023 (16:13 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும் என மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பு அளித்துள்ளார்.
 
மேலும் இரு நீதிபதிகள் அமர்வில் கைது செல்லும் என தீர்ப்பளித்த நீதிபதி பரத சக்ரவர்த்தி தெரிவித்த காரணங்களுடன் ஒத்துப்போவதாக மூன்றாவது நீதிபதி கூறியுள்ளார்
 
கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு எந்த தடையும் கோர முடியாது என்றும், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
 
 மேலும் செந்தில் பாலாஜி சட்டத்திற்கு உட்பட்டவர் தான் என்றும் அவர் சட்டத்தை மதிக்க வேண்டும் என்றும் குற்றமற்றவர் என அவர்தான் நிரூபிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பு தெரிவித்துள்ளார். 
 
கைது காரணங்களை பெற மறுத்துவிட்டு தரவில்லை என முன்வைத்த வாதம் நிராகரிக்கப்படுகிறது என்றும் கைது செய்ய அதிகாரம் உள்ளது என்றால் காவலில் எடுத்து விசாரிப்பதும் அனுமதிக்கத்தக்கது என்றும் நீதிபதி தனது தீர்ப்பு தெரிவித்துள்ளார். 

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்