செந்தில் பாலாஜியை காவலில் எடுக்காதது ஏன்? நீதிபதி கேள்விக்கு அமலாக்கத்துறை பதில்..!

புதன், 12 ஜூலை 2023 (15:25 IST)
செந்தில் பாலாஜியை விசாரிக்க அனுமதி பெற்றும், காவலில் எடுத்து விசாரிக்காதது ஏன் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சிவி கார்த்திகேயன் கேட்ட கேள்விக்கு அமலாக்கத்துறை பதில் அளித்துள்ளது. 
 
செந்தில் பாலாஜி மீதான ஆட்கொணர்வு மனு குறித்த விசாரணை கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் மூன்றாவது நீதிபதிக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்றைய விசாரணையின் போது அமலாக்கத்துறை வழக்கறிஞர் வாதிடும்போது செந்தில் பாலாஜியை விசாரிக்க அனுமதி பெற்றும் காவலில் எடுக்காதது ஏன் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார் 
 
அப்போது உடல்நலம் பாதித்த செந்தில் பாலாஜியை காவலில் எழுத்து ஏதேனும் நிகழ்ந்தால் நாங்கள் பொறுப்பேற்க நேரிடும் என்றும் அதனால் நிபந்தனைகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடினோம் என்றும் அமலாக்கத்துறை வழக்கறிஞர் பதில் அளித்தார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்