ஒரு அமைச்சரை நீக்குவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று கூறுபவர்கள் ஒரு கைதியை அமைச்சராக வைத்திருப்பதற்கு சட்டம் இடம் கொடுக்கிறதா என்பதை கூற வேண்டும் என அதிமுக பிரமுகர் செம்மலை தெரிவித்துள்ளார்.
இலாகா இல்லாத அமைச்சர் ஆக செந்தில் பாலாஜி இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த கவர்னர் ரவி அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் உத்தரவிட்டார். இதனை அடுத்து முதலமைச்சர் முக ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் கட்சியின் தலைவர் கேஎஸ் அழகிரி உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் ஆளுநருக்கு அமைச்சரை நீக்கி அதிகாரம் இல்லை என்று தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில் அதிமுகவின் செம்மலை ஒரு அமைச்சரை நீக்குவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று கூறுபவர்கள் ஒரு கைதியை அமைச்சராக வைத்திருப்பதற்கு சட்டம் இடம் கொடுக்கிறதா என்பதை கூற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.