கடந்த சில நாட்களாகத் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. கடந்த வியாழக்கிழமை ஒரு சவரன் தங்கம் 1,000 ரூபாய் குறைந்து 74,040 ரூபாய்க்கு விற்பனையானது.
நேற்று வெள்ளிக்கிழமை ஒரு கிராம் தங்கம் 45 ரூபாய் சரிந்து 9,210 ரூபாய்க்கும், ஒரு பவுன் தங்கம் 360 ரூபாய் குறைந்து 73,680 ரூபாய்க்கும் விற்பனையானது.
இந்த நிலையில் இன்று மூன்றாவது நாளாக தங்கத்தின் விலை குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 50 ரூபாய் சரிந்து 9,160 ரூபாய்க்கும், ஒரு பவுன் தங்கம் 400 ரூபாய் குறைந்து 73,280 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.