''செந்தில் பாலாஜியை நீக்குவதற்கு ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை'' - சபாநாயகர் அப்பாவு

வியாழன், 29 ஜூன் 2023 (20:53 IST)
தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர்  அப்பாவு, ''அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்குவதற்கு ஆளுநர் ரவிக்கு எந்த அதிகாரமும் இல்லை'' என்று தெரிவித்துள்ளார்.

அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சமீபத்தில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டார். 

இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு  நேற்று  காணொளி மூலம்  மருத்துவமனையில் இருந்து ஆஜர்படுத்தப்பட்ட  அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூலை 12 வரை நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. 

இந்த நிலையில், அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என்று சமீபத்தில் தமிழ அரசு அறிவித்திருந்த நிலையில், இன்று தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர்.  ஆர்.என். ரவி உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர்  அப்பாவு, ''அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்குவதற்கு ஆளுநர் ரவிக்கு எந்த அதிகாரமும் இல்லை'' என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: ‘’ஆளுநர் ரவி பிறப்பித்துள்ள உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை. ஒரு அமைச்சர் கைது செய்யப்பட்டால் அவரைப் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. அவர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டால் மட்டும்தான் அப்பதவியில் இருந்து நீக்க முடியும்.  இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பாக அவர் செயல்பட்டுள்ளார்’’  என்று தெரிவித்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்