செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டிருந்தார். இது தமிழக அரசியலில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், ''இந்திய வரலாற்றின் இது போன்ற ஒரு அரசியல் அவமதிப்பு நடந்தததில்லை'' என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜியை சமீபத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இன்று தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர். ஆர்.என். ரவி உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு தமிழக காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறியுள்ளதாவது: சட்டப்படி, ஒரு சட்டப்பேரவை உறுப்பினரோ, அமைச்சரோ நீதிமன்றத்தால் 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டிக்கப்பட்டால் அவர்கள் பதவி இழக்கும் நிலை ஏற்படும். வேறு எதன் அடிப்படையிலும் அவர்களைக் பதவி நீக்கம் செய்ய முடியாது என்று கூறியுள்ளார். மேலும், இந்திய வரலாற்றின் இது போன்ற ஒரு அரசியல் அவமதிப்பு நடந்தததில்லை'' என்று தெரிவித்துள்ளார்.