'வாய்ப்பில்லை ராஜா’: எச் ராஜாவுக்கு காமெடியாக பதில் கூறிய சீமான்..!

Webdunia
சனி, 8 ஜூலை 2023 (17:52 IST)
தமிழ் தேசிய கொள்கைகளை கைவிட்டால் சீமான் உடன் கைகோர்க்க தயார் என சமீபத்தில் பாஜக பிரமுகர் எச் ராஜா அழைப்பு விடுத்தந்த நிலையில் இது குறித்து கேள்விக்கு பதில் அளித்த சீமான் ’வாய்ப்பில்ல ராஜா’ என காமெடியாக பதில் அளித்துள்ளார். 
 
நடிகர் இயக்குனர் சீமான் கடந்த பல ஆண்டுகளாக நாம் தமிழர் என்ற கட்சியை நடத்தி வருகிறார். இந்த கட்சிக்கு கொஞ்சம் கொஞ்சமாக வாக்கு சதவீதம் அதிகரித்து வருகிறது. 
 
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த பாஜக பிரமுகர் எச் ராஜா சீமானுடைய கொள்கை கோட்பாடும் எங்களுடைய கொள்கை கோட்பாடும் ஒத்து வருகிறது என்றும் ஆனால் அவர் தமிழ் தேசிய கொள்கையை மட்டும் விட்டு விட்டு வந்தால் அவருடன் கைகோர்க்க தயார் என்றும் தெரிவித்திருந்தார். 
 
இது குறித்த கேள்விக்கு பதில் தெரிவித்த சீமான் வாய்ப்பில்ல ராஜா என்று தெரிவித்து பாஜகவுடன் எப்போதும் சேர மாட்டேன் என்று கூறியுள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்