அமைதிய பத்தி நீ எனக்கு க்ளாஸ் எடுக்குறியா? கடுப்பான சீமான்

Webdunia
புதன், 20 நவம்பர் 2019 (17:37 IST)
இனப்படுகொலையை அரங்கேற்றிவிட்டு தமிழகத்தலைவர்கள் இரு இனங்களிடையே பகைமையை ஊட்டுகிறார்கள் என்பதா? நாம் தமிழர் சீமான், நமல் அறிக்கைக்கு கண்டனம். 
 
இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ச மகன் நமல் ராஜபக்ச, சமீபத்தில்  மதிமுக-வின்‌ பொதுச்‌ செயலாளர்‌ வைகோ, விடுதலை சிறுத்தைகள்‌ கட்சியின்‌ தலைவர்‌ தொல்‌ திருமாவளவன்‌, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ், தமிழர்‌ தேசிய முன்னனி தலைவர்‌ பழ.நெடுமாறன்‌ ஆகியோர் தமிழகத்தில்‌ தமது சுயநல சந்தர்ப்பவாத அரசியலை செய்வதாக குறிப்பிட்டிருந்தார். 
 
இந்நிலையில், இதற்கு கண்டம் தெரிவித்து நாம் தமிழர் கட்சி சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் குறிப்பிடுள்ள சில பின்வருமாறு, 
தமிழர், சிங்களர் எனும் இரு இனங்களிடையே தமிழக அரசியல் தலைவர்கள் பகைமையையும், துவேசத்தையும் உண்டாக்குவதாக மகிந்தா ராஜபக்சேவின் மகனும், இலங்கை பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சே கூறியிருப்பது வன்மையானக் கண்டனத்திற்குரியது.
 
தமிழினப்படுகொலையைத் திட்டமிட்டு நடத்தி இரண்டு இலட்சம் தமிழர்களைக் கொன்றொழித்த இனப்படுகொலையாளன் மகிந்தா ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே அதிபராகப் பொறுப்பேற்றிருப்பது தமிழர்களுக்கு ஒரு இருண்டகாலமாகும். இந்த ஆட்சி மாற்றம் பெரும் அச்சுறுத்தலையும், கலக்கத்தையும் தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது என்றால், அது மிகையில்லை.
 
இரண்டு இலட்சம் தமிழர்களைக் கொன்றொழித்த இனப்படுகொலையாளன் மகிந்தா ராஜபக்சேவின் மகன் சமாதானத்தையும், அமைதியையும் பற்றி நமக்குப் பாடமெடுப்பது நகைப்புக்குரியது என குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்