இன்னும் ஒரு மாதத்தில் சசிகலா சிறையில் இருந்து வெளியே வருவார் என செய்திகள் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியாகி சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றனர். சசிகலா சிறையில் அடைக்கப்பட்டு இரண்டரை வருடங்கள் ஆகிறது.
இந்நிலையில், சமீப காலமாக சசிகலா முன்கூட்டியே சிறையில் இருந்து வெளியாவது குறித்து செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளது. அதற்கு ஏற்ப தினகரனும், சசிகலாவை வெளியில் எடுக்க சட்ட ரீதியிலான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறோம். அவர் நிச்சயம் விரைவில் வெளியே வருவார் என தெரிவித்திருந்தார்.
இப்போதைய தகவல் என்னவெனில் சசிகலாவை பெங்களூரு சிறையில் சந்திக்க சென்ற சில முக்கிய நிர்வாகிகளிடம் சசிகலா பேசினாராம். அப்போது அவர் இன்னும் ஒரு மாதத்திற்குள் வெளியே வந்துவிடுவேன் என கூறியதாக பிரபல நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
சசிகலா மேலும் கூறியதாக குறிப்பிடப்பட்டிருந்ததாவது, நான் ஓரிரு மாதத்தில் சிறையில் இருந்து வெளியே வர வாய்ப்புள்ளது. அதற்கான பணிகள் நடந்து வருகிறது.
நான் வெளியே வந்ததும் கட்சி பிரச்னைகள் அனைத்திற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும். எனவே, அனைவரும் அதுவரை அமைதியாக இருங்கள் என்று தெரிவித்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சசிகலாவின் இந்த ஆறுதல் வாத்தைகளால் முக்கிய நிர்வாகிகள் புது தெம்புடன் சென்னை திரும்பியுள்ளனராம். இச்செய்தியை கேட்டு தொண்டர்களும் மகிழ்ச்சியில் உள்ளனராம்.