அதிமுக பிளவுக்கு திமுகதான் காரணம்: சசிகலா பேட்டி

Webdunia
புதன், 10 ஆகஸ்ட் 2022 (15:20 IST)
அதிமுகவின் பிளவுக்கு திமுகதான் காரணம் என்றும் அதிமுகவில் உள்ளவர்களோ அல்லது மத்திய அரசு காரணம் அல்ல என்றும் சசிகலா தெரிவித்துள்ளார்
 
இன்று திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா அதிமுக உருவான விதம் மற்றும் அதிமுகவின் முதல் எம்பி மாயத்தேவர் குறித்த தகவல்களை தெரிவித்தார் 
 
மேலும் அதிமுக தற்போது ஓபிஎஸ் இபிஎஸ் என இரண்டு பிரிவாக பிரிந்ததற்கு முழு காரணம் திமுகதான் என்றும் இதற்கு மத்திய அரசும் பாஜகவும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
திமுகவின் சதி காரணமாக அதிமுக இரண்டாக பிரிந்து உள்ளது என சசிகலா கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அதிமுகவை மீண்டும் ஒன்றிணையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்