ரஜினிகாந்த் ஒரு வாசகம் என்றாலும் திருவாசகமாக பேசுவார் - செல்லூர் கே.ராஜு

Webdunia
புதன், 10 ஆகஸ்ட் 2022 (15:17 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஒரு வாசகம் பேசினாலும் திருவாசகம் போல் பேசுவார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்
 
இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் ரஜினிகாந்த் சமீபத்தில் அலுவலரை சந்தித்து இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அவர் ரஜினிகாந்த் ஏற்கனவே அரசியலுக்கு வர மாட்டேன் என்று சொல்லிவிட்டார் என கூறிய அவர், ரஜினிகாந்த் ஒரு வாசகம் பேசினாலும் திருவாசகம் போல் பேசுவார் என்றும் அவரது ஒவ்வொரு வார்த்தையிலும் ஆயிரம் அர்த்தம் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
மேலும் மக்கள் திமுக அரசு மீது கொதிப்படைந்து உள்ளதாகவும் எனவே நாடாளுமன்ற தேர்தலில் என்ன சொல்லி வாக்கு கேட்பது என தெரியாமல் உள்ளனர் என்றும் அவர் கூறினார் 
 
அதிமுகவின் ஒரே எதிரி திமுக மட்டுமே என்றும் மற்றவர்களை நாங்கள் பொருட்படுத்துவதில்லை என்றும் அதிமுக வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் ஒரு கேள்விக்கு பதில் அளித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்