அதிமுகவின் முதல் எம்பி மாயத்தேவர் மறைவு: ஓபிஎஸ், ஈபிஎஸ் தனித்தனியே இரங்கல் அறிக்கை!

செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (16:34 IST)
அதிமுகவின் முதல் எம்பி மாயத்தேவர் சற்றுமுன்னர் காலமானதை அடுத்து அதிமுக பொதுச்செயலாளரும் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார் 
 
அவர் தனது இரங்கல் அறிக்கையில் எம்ஜிஆர் அவர்களால் அதிமுக துவக்கப்பட்ட மிக குறுகிய காலத்தில் 1971ஆம் ஆண்டில் முதல் முதலில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மாயத்தேவர் அவர்கள் மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு துயரமும் வேதனையும் அடைந்தேன் என்று குறிப்பிட்டுள்ளார் 
 
இதனை அடுத்து ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தனியாக இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் மாபெரும் இயக்கத்தினை துவக்கிய பிறகு முதல் முதலாக நடைபெற்ற திண்டுக்கல் மக்களவைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி கனியை பறித்து கொடுத்த மாயத் தேவர் அவர்களின் மறைவிற்கு துக்கம் அனுசரிக்கும் விதமாகவும் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் இன்று முதல் மூன்று நாட்களாக அதிமுக கொடிகள் அரை கம்பத்தில் பறக்க விடப்படும் என்று தெரிவித்துள்ளார்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்