ஜெயலலிதாவின் புனித அவதாரமே... ஓபிஎஸ்-க்கு ஆப்பு வைக்கும் சசி!

Webdunia
புதன், 3 பிப்ரவரி 2021 (08:43 IST)
சசிகலாவுக்கு ஆதரவாக பெரியகுளத்தில் அடுத்தடுத்து ஒட்டப்பட்ம் போஸ்டர்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளன. 

 
சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா விடுதலையாகி பெங்களூருவில் ஓய்வெடுத்து வருகிறார். வரும் 5 ஆம் தேதி சசிகலா தமிழகம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்நிலையில் தமிழகம் வரும் சசிகலாவை வரவேற்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. அந்த வகையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அடுத்தடுத்து ஒட்டப்பட்ம் போஸ்டர்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளன. 
 
ஆம் தற்போது அதிமுகவை சேர்ந்த ஒருவர், தமிழ்நாட்டை வழிநடத்த வருகை தரும் ஜெயலலிதாவின் புனித அவதாரமே, அதிமுகவின் பொதுத்செயளாலரே என வாசகங்கள் இடம்பெற்ற போஸ்டரை ஒட்டியுள்ளது பரபரப்பை கூடியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்