சசிகலா நலம்பெற வாழ்த்து சொன்னது ஏன்? ஓபிஎஸ் மகன் விளக்கம்!

புதன், 3 பிப்ரவரி 2021 (08:25 IST)
அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளரான சசிகலா உடல்நலம் இல்லாமல் இருந்த போது அவருக்கு வாழ்த்து தெரிவித்தது ஏன் என ஜெய்பிரதீப் தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா விடுதலை செய்யப்பட்ட நிலையில் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமானார். அவர் டிஸ்சார்ஜ் ஆக இருந்த நிலையில் அவருக்கு உடல்நிலை மோசமானது பலக் கேள்விகளை எழுப்பியது.

அப்போது தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் இளையமகன் ஜெயபிரதீப் ட்விட்டரில், “கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அம்மையார் திருமதி சசிகலா நடராஜன் பூரண குணமடைந்து இனிவரும் காலங்களில் நல்ல உடல் நலம் பெற்று அறம்சார்ந்த பணியில் கவனம் செலுத்தி மன நிம்மதியுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

இது அரசியல் தளத்தில் சந்தேகங்களை எழுப்பியது. அதுபற்றி இப்போது ஜெய்பிரதீப் விளக்கம் அளித்துள்ளார். திருச்செந்தூர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த அவர் ‘நான் மனிதாபிமான அடிப்படையிலேயே அப்படி டிவீட் செய்தேன்’ எனக் கூறியுள்ளார். அதிமுகவில் இருந்த சிலர் சசிகலா விடுதலைக்காக போஸ்டர் அடித்த போது அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்