டி.டி.வி தினகரன் கட்சிக்கு 'சசிகலா' தலைவர்? தொண்டர்கள் நிலை என்ன ?

Webdunia
திங்கள், 18 நவம்பர் 2019 (15:03 IST)
தமிழக அரசியல் யாராலும் கணிக்க முடியாத நிலையில் சென்று கொண்டுள்ளது .ஏகப்பட்ட எதிர்பார்புகள் அன்றாடம் பிரேக்கிங் செய்திகள், அவதானிப்புகள் அற்ற தீடீர் திருப்பங்கள் நிறைந்த முடிவுகள் என எல்லாவற்றுக்குமான  தலைமை மாநிலமாக தமிழ்நாடு உருவாகிக்கொண்டுள்ளது.

திராவிடக் கட்சிகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், திராவிட எதிர்ப்புக் கட்சிகள், சாதிக் கட்சிகள் ,வலதுசாரிகள் என எண்ணற்ற கட்சிகள் தொடர்ந்து இயங்கிவந்தாலும், திராவிடக் கட்சிகளின் ஆளுமையை யாராலும் அசைக்க முடியவில்லை.

இந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆளுமையில் வெளிச்சத்துக்கு வந்து அவராலேயே விரட்டப்பட்ட தினகரன், ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின், அதிமுகவினரால் வெளியேற்றப்பட்டார். 

ஜெயலலிதாவின் தோழி சசிகலா அதிமுகவின் அடுத்த தலைவர் என கட்சியினர் பொதுஅறிப்பு அதற்கான எல்லா அறிவிப்புகளையும் செய்தபோது, வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக சசிகலா பெங்களூரு அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார்.

அடுத்தடுத்து  உட்கட்சியில் ஏற்பட்ட குழப்பங்கள் கடைசியில் , சசிகலா , தினகரனால் எடப்பாடி பழனிசாமி முதல்வராக்கப்பட்டர். அதுதான் தினகரனுக்கு பெரும் பின்னடைவானது.

கடையில் .ஓபிஎஸ்சும், இபிஎஸும் கூட்டணி சேர்ந்து தினகரனை கட்சியில் இருந்து விலக்கினர். அதற்கெல்லாம் அசராத தினகரன்  அதிமுகவில் இருந்து 21 எம்.எல்.ஏக்களை வலைத்துப்போட்டு தனிக்கட்சி ஆரம்பித்தார்.

அதில் இருந்து செந்தில்பாலாஜி, தங்கச் தமிழ்ச்செல்வன்,புகழேந்தி என முக்கியஸ்தர்கள் விலகிச்சென்ற பின், தினகரன் அரசியல் வண்டியில் யாருமின்றி காலியாகிட்டது. அவர்தான் அதை இயக்கிவருகிறார். இருப்பினும் சில அவரது கஷ்டகாலத்தில் சில நம்பிக்கைக்குரியவர்கள் அவருடன் இருக்கின்றனர்.

இந்த நிலையில், சசிகலா விரையில் சிறைத்தண்டனை முடிந்து வெளியே வந்ததும் தினகரன் தொடங்கியுள்ள  அமமுகவின் தலைவர் ஆவார் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துவருகின்றனர்.

தற்போது, ஆளும் அதிமுக தரப்பினர்கள்  சசிகலாவை கட்சியில் சேர்க்க மாட்டோம் எனச் சொன்னாலும் தனிப்பட்ட விவாதங்களின்போது சசிகலாவை ’சின்னம்மா’ என்றே அழைத்துப் பழையதை மறக்காமல் உள்ளனர்.

இந்நிலையில் , சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்ததும் தனிமைப்பட்ட தினகரனுக்கு ஆதரவுக்கரம் நீட்டிக் கட்சியை வளர்க்க உதவுவாரா இல்லை, பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தி மீண்டும் அதிமுகவுடன் இணைய வழிவகுப்பாரா என்பதைக் காலம் தான் முடிவு செய்யும். அதேசமயம் தற்போதுள்ள தொண்டர்கள் அவது தலைமையை ஏற்பார்களா என்பதையும் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள்தான் தீர்மானிக்கும்.

ஏனென்றால் இத்தனை அரசியல் கட்சிகளும் அந்த ஓட்டு உக்திக்குத்தானே!

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்