இலங்கை அதிபர் தேர்தலில் மீண்டும் மஹிந்த ராஜபக்ஷே அதிக வாக்குகள் வென்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ராஜபக்ஷே காலத்தில் இலங்கையில் ஈழ தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் உலகையே உலுக்கிய நிலையில், மீண்டும் அவர் ஆட்சிக்கு வந்திருப்பது உலக தமிழர்கள் பலரை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
இலங்கை அதிபராக ராஜபக்ஷே தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார். இந்நிலையில் அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின் “ராஜபக்ஷே வெற்றி உலக தமிழர்களை அச்சம் கொள்ள செய்திருக்கிறது. அவரது பழைய வரலாறு ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரானது என்பதையும், அதனால் ஏற்பட்ட கோடூரமான விளைவுகளையும் உலகமே அறியும். இனியாவது ராஜபக்ஷே சமத்துவத்துடனும், மனித நேயத்துடனும் நடந்து கொள்ள வேண்டும், மத்தியில் ஆளும் பாஜக மற்றும் பிரதமர் மோடி தமிழர்களின் நலனை உறுதிசெய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.