மருத்துவ படிப்பு படிக்க நீட் தேர்வு கட்டாயம் இன்று கடந்த சில வருடங்களாக உள்ள நிலையில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த 18 வயது மாணவன் தெருவில் சமோசா விற்பனை செய்து வந்த நிலையில் அவர் நீட் தேர்வில் 664 மதிப்பெண் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
நீட் தேர்வுக்கு கோச்சிங் சென்டர் சென்றால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்று லட்சக்கணக்கில் அதுக்கு பணம் செலவு செய்து கொண்டிருக்கும் நிலையில் உத்தரபிரதேச சேர்ந்த சன்னி குமார் என்ற 18 வயது இளைஞர் 12ஆம் வகுப்பு படிக்கும் போது சாலை ஓரத்தில் அவரது தந்தை நடத்தும் சமோசா கடையில் வேலை செய்தார்.
மருத்துவம் படிக்க வேண்டும் என்ற தீராத ஆசை அவருக்கு இருந்த நிலையில் சமோசா விற்பனையில் இருந்து கொண்டே கிடைக்கும் நேரத்தில் அவர் கவனமாக படித்தார். எந்தவித கோச்சிங் சென்டர் செல்லாமல் அவர் படித்து வந்த நிலையில் தற்போது அவர் நீட் தேர்வில் 720 மதிப்பெண்ணுக்கு 664 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒவ்வொரு டாக்டரையும் பார்க்கும்போது எனக்கும் டாக்டராக வேண்டும் என்ற ஆசை ஏற்படும் என்று அதற்காக நான் கஷ்டப்பட்டு இரவு பகலாக படித்தேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கடின உழைப்பும் குறிக்கோளும் இருந்தால் கோச்சிங் சென்டர் சென்று தான் நான் நீட் தேர்வில் பாஸ் செய்ய வேண்டும் என்பதில்லை, சொந்தமாக படித்தும் பாஸ் செய்யலாம் என்பதை இந்த மாணவர் நிரூபித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.